vendredi 10 octobre 2014

மதி ஒளி தந்தாள் மாலதி..


உதயம் ஆயிரம் உலகில் இருந்தென்ன தோழி
இன்னும் விழிகள் நீரில் விடியலைத் தேடி
இனச்சுத்தி செய்யும் நரி இன கூட்டம்
வனக் காட்டில் எமை நிறுத்தி
விளையாடிப் பார்கிதடி          
 
புலிகள் என்றார் புயல்கள் என்றார்
புதுமைப் பெண்கள் நாங்களடி
அண்ணன் தந்தான் வீரச் சீதணம்
அணி நின்று வென்றோம்
அள்ளக் குறையாதடி ..
பெண்ணின விலங்கை பெண்ணே உடைத்தோம்
வீழ்ந்தோம் அல்ல விதையாய் ஆனோம்
விதையிலிருந்து நாளையும்  எழுவோம்
விடிவை காண்போம் விழி நீர் துடைப்போம்
அடிமை விலங்கை அறுத்தே தணிவோம்
விழிகள் இன்னும் விடியலைத் தேடி ..
 
Kavignar Valvai Suyen                                                
 


 

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...