என் தாய் தந்தையர் எனக்குத்
தந்த
தங்க
வளையலில்அவர்கள் என் மேல் விரித்திருக்கும்
பாசக் குடை கண்டேன் .. ..
அடகுக் கடையில் என் வளையல்
வட்டி போட்ட குட்டிக்காக
விலையான போதில்
எங்கள் வீட்டின் ஏழ்மை கண்டேன் .. ..
தங்கம் என்ன வைரம் என்ன
பொன்னும் மணியுமாய் பாச நெற்கள்
விளைந்து கிடக்கும் வயல்தானே
எங்கள் வீடு ..
அன்போடு அறுபடை செய்து
என்றும் இன்பமாய் வாழ்கிறோம் .. ..
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...