என் தோழனும் நானும் பகிர்ந்துண்ட
உணவில்
புன்னகை பூர்த்து வீடு சென்றேன்
பேய்க்கு படைத்ததை தின்ட பேயா என,
துவைத்தெடுத்துவிட்டாள் என்னை என் அன்னை..!
சுண்டுவில் அடித்து பிடித்த காடையை
சுடலை நெருப்பில் சுட்டு
அங்கிருந்த உணவோடுதானே
சேர்த் துண்டோம்.. ..
என் பாட்டன், என் பேரன், என் அப்பன்
எல்லாருக்கும் இறுதிச் சடங்கு செய்து
அங்கதானே சாப்பாடு வைத்தார்கள்..
அப்படியானால் ஊரில் மனிதரே இல்லையா
நாங்களெல்லாம் பேய்கள் தானா...?
புன்னகை பூர்த்து வீடு சென்றேன்
பேய்க்கு படைத்ததை தின்ட பேயா என,
துவைத்தெடுத்துவிட்டாள் என்னை என் அன்னை..!
சுண்டுவில் அடித்து பிடித்த காடையை
சுடலை நெருப்பில் சுட்டு
அங்கிருந்த உணவோடுதானே
சேர்த் துண்டோம்.. ..
என் பாட்டன், என் பேரன், என் அப்பன்
எல்லாருக்கும் இறுதிச் சடங்கு செய்து
அங்கதானே சாப்பாடு வைத்தார்கள்..
அப்படியானால் ஊரில் மனிதரே இல்லையா
நாங்களெல்லாம் பேய்கள் தானா...?
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...