எய்யும் அம்புக்கு ஏது எல்லை ...
என் உறவே இது உங்கள் தாகம் என் தாகம் தமிழனின் தமிழீழத் தாகம்... இது தூர நோக்கின் இலக்கென்பதை யாரும்
மறந்துவிடும் நிலையில் இல்லை. முப்பது
ஆண்டுகள் விடாது சமர் புரிந்த இதிகாசமோ புராணமோ வரலாறோ சரித்திரமோ இயல்பு நிலை
அரசுரிமை சான்றோ இதுவரையில் பொறிக்கப்படவில்லை. எங்கள் தேசத்தில் தமிழீழம்
என்ற சுய உரிமை போராட்டம் நிகழ்ந்து பொறிக்கப் பட்டு நிந்தனையில் எரிந்து நீறாகிக்
கிடக்கிறது. அதன் இலக்குமட்டும் மையத்தை
விட்டு மாறாமல் உண்மையாய் உடலை விட்டகலாத உயிரோடு
அனலிடைப் பயணத்தில் அங்கும் இங்குமாய் சிதறிக்கிடக்கிறது.. பச்சோந்திகளின் நடுவே முளைத்த நம் விசுவாசத் தலைவன்
யாருக்கும் அஞ்சாதவன் அன்புக்கு அடியவன். இவன் தந்த யுத்த களங்கள் வீரத்தின் விளை
நிலம் என பெயர் எழுதிய பொன் எழுத்துக்களும் பெயர் வாங்கிக் கொண்டதை உலகே அறியும்.
நித்திய வாழ்வு நிரந்தரம் அல்ல ஆசை யெனும்
பேய் இவனை ஆண்டதில்லை ஒரு நாளும் அடுத்தவன் காலில் மிதிபடும் இழி நிலை இனியும்
வேண்டாம் என்று உன்னத வாழ்வின் உரிமை பெற்றே வாழவேண்டும் என்ற வீரம் தந்தவன் எம்
தலைவன் .. எம்மினத்தின் விடிவுகால சக்கரமாய் திகழ்ந்தவன். அவன் தந்த தொடர்
போராட்டங்கள் இன்று எங்கோ ஒரு மூலையில் பேச்சுக்கு வாதமாய் வலம் வந்தபோதும்
நீரூற்றி நிழல் தரு மரங்களாய் வளர்கிறது. தூற்றுவார் தூற்றுனீர்களே போற்றுவோரும் போற்றி
நின்றீரே கொடுத்த விலை கொடுத்த தியாகம் கொடுத்த உயிரின் உன்னதம் அனைத்தும் தமிழீழ
விடிவுக் காகத்தானே கொடுக்கப்பட்டது. கடையில் வாங்கும் பொறுள் அல்ல சுதந்திரம்.. உறவுகளே உனக்கொரு பாதி எனக்கொரு பாதியென பாகம்
பிரித்தது போதும். உணர்வலை ஊற்றிலே உள்ளொளி பெருக்கி சமுதாய சூழலுக்குகந்த நல்
நிலை வகுத்து ஆனந்தம் அள்ளித் தந்தானே ஆதவன் என வந்த பிரபாகரன்.
பொறாமை கொண்ட உறவுகள் காட்டிக் கொடுத்தன இன்னும் சற்றே இறங்கி கூட்டியும் கொடுத்தன. அற்ப்ப ஆசைகள் காம
இச்சைகள் யாதி வெறிகள் ஈகோ இழி நிலைகள் இத்தனைக்கும் மொத்த உருவாய் நின்று ஆனந்தம்
கொள்கிறார் இன்னும் சிலர் நம்மிடையே காட்டிக் கொடுப்போரே நீரும் அடிமை என்பதை ஏனோ
நினைந்தும் மறைக்கிறீர்கள். அடிமையென அதி கீழ் நிலையில் வாழ்வது மேலா ஒருமைப்
பாட்டோடு ஒன்றே இனம் என்ற பெருமித
ஆட்சியில் நன்றே வாழ்தல் பெரிதா.... யாருக்கானது ஈழத் தேடல். உனக்கானது உன் எதிர்கால
வம்சத்திற்கானது. உன்னைப் போல் தனக்கென்றும் தன் பிள்ளைக்கென்றும் தன் சந்ததிக்காக
என்றும் நினைத்தானா தானைத் தலைவன் பிரபாகரன்.
காட்டிக் கொடுத்தாய் கூட்டிக் கொடுத்தாய் கை நிறைந்த காசை எண்ணி நெஞ்சம் இனித்தாய் அது உனது சிற்றின்பச் சாரலாய் இருக்கலாம் உன்
மனையாளும் உனக்கு சொந்தம் இல்லை உன் பிள்ளையும் இப்போது உனதில்லை மாற்றான் கொடுத்த
அழகி உன் அந்தப் புறத்தில் ஆனாலும் நாளை உன் களுத்தில் கத்தி வைப்பவள்
அவள்தான் என்பதை நினைவிற்கொள். முப்பது ஆண்டுகள் கொண்ட தவக்கோலம் இழப்புகளின்
உயிரில் கிடைத்த வெற்றிக் கனியான காலம் கரைந்து விட்டது என மூடி வைக்கும் புத்தகம்
அல்ல தமிழீழப் போராட்டம்.. எரிந்த சாம்பல்
தூசிகள் எங்கோ பறந்துவிட்டது என கனவு காணாதீர்கள். தமிழ் இனத்தின் விடுதலைச்
சுவாலை அணையாது இளந்த உயிர்களில் இருந்து பாலைவனச் சுவாலை மீண்டும் ஒரு நாள் எழும்
நிச்சயம் விடிவினை தொடும் . செம்மொழி என
பேர்சூடி ஊர் கூட்டி உறவுக் கணக்கில் நிலுவை
சேர்த்த உத்தமரே இனத்துக்காக மோதும் விடுதலை ஊற்றே உன்னையும் என்னையும் இனிவரும்
நம் சந்ததியையும் தன்னாட்சி உரிமையோடு வாழ வைக்கும்.. தாய் நிலத்தின் தடைகள் உடையும் தூர இலக்கின் கணை தன் நிலை பெறும். எய்யும் அம்புக்கு எல்லை இல்லை ..
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...