எனக்குள்ளே
எனக்குள்ளே என்னாச்சு
ஆசை
மழை கண்ட தூறல் தன்னை கொஞ்சம் நிறுத்திவிட்டு
என்னை ஏதேதோ ஏதேதோ செய்யுதடா .. ..
என் உஷ்ணக் காய்ச்சலில் காய்ந்த ஜன்னலோ
சாரல் நனைந்த குளிர் விட்டு
முத்தச் சத்தம் கொடுத்து விரகம் மூட்டுதடா .. ..
மாதென் செய்வேன் .. ..?
இதழ் ரசம்தானே இரவுக்கு ஆகாரம்
என்னைத் தொடுவது நீயாகட்டும்
நான்கு இதழ்களும் நான்மறை எழுதட்டும்
விடியலும் உட் புகாமல் ஜன்னலைச் சாத்திவிட்டு
குதூகலித்து காத்திருக்கிறது மனசு ...
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...