vendredi 4 juillet 2014

ஆனவரை அழுதோம் தொழுதோம் ஆண்டவனே என்று ...

ஆனவரை அழுதோம் தொழுதோம்
ஆண்டவனே என்று
மதங்களின் பிதாக்களும்
மனம் இரங்க வில்லையே
எம் துயர் கண்டு
 
அராயக அடி நிலை கிடந்துளன்று
உரிமையும் இளந்து உறவுகள் எரிந்து
விடியாதோ என்று ருந்தோம்
விழிகளை தொட்டதடா விடியலின் கீற்று
யூலை ஐந்தில்
 
உதய சூரியனும் ஒரு முறை
தன்னை கிள்ளி பார்த்தான்
கந்தக வெடியொடு களமுனை எரித்து
தன் முன்னே தமிழர்க்கு
விடியலை தந்தது யார் என்று
 
தன்மானத் தமிழா எண்ணிக் கொள்
உலகரங்கில் உன் குடி உயர்ந்து
நிமிர்ந்த தமிழன் என
தலை நிமிர்ந்து
நடக்கின்றாய் நீ இன்று
உன் நிமிர்வுக்கு காரணம் எவன்டா ......
அந்தக் கரிய புலி  உறு துணை
தெய்வங்கள் தான்டா
நின்று தொழடா நீ
தமை கொன்று உமக்கருளிய
திருக் கோயில் தெய்வங்களை
உன் வாழ் நாளில் ஓர் நாள்
தமிழீழ விடியல் நீ காண்பாய்..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...