என்னவளே உன் பார்வையில்
கனிந்ததடி
என் வாழ்வின் வசந்தம் ..குடும்பம் எனும் ஆலயத்திற்குள்
நீக்கமற நிறைந்திருந்து பன் முகம் காட்டி
பரவசம் தருகிறாய் ..
அன்பெனும் அரவணைப்பை
அன்னையிடம் கண்ட பின்
உன்னிடம் தானே கண்டேன் இதுவரையில் ..
கோபத்தில் நீ கொதிக்கும் சூரியன்
பாசத்தில் நீ பனி மலைச் சாரல்
பெற்றெடுத்த குஞ்சுகள் பிள்ளைகள்தான்
கட்டு மீறலாம் கவலை நீரலைகள்
உச்சி வந்த சூரியன் உள்ளங் கால் சுட்டாலும்
நீ தந்த உச்சக் குளிரின் பாசச் சாரலில்
நின்றே வாழுகிறார் அவர் என்றும் மறவார் ..
வென்று விட்டாய் நீ
தொன்று தொட்ட வாழ்வை
நானும் நன்றே நனைகிறேன்
வாழ்க்கைச் சோலையில்
பனித் துளி கொஞ்சும் பசும் புல்லாய் ...
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...