mardi 27 janvier 2015

இடம் மாறும் இதயங்கள்...


விழிகளால் கொய்தாய் என்னை நீ
உன் தோழில் சாய்ந்துவிட்டேன்  
இதழ்களின் ஈரம் இடம் மாறியதால்
குன்றேறி குளிர் மேகம் மூடுதடா
பூவுக்குள் புதுமழை பூமிக்கும் தெரியலையே
பூபாளமோ தேனாமிர்தமோ நீ வாசிக்கின்றாய்
சதிராடுகின்றன நெற் கதிர்கள்
வரப்புயர வாழ்வளித்த கோமகனே
ஹரிகிருஷ்ணனின் புள்ளாங்குழல் நான்
வாசிக்க இது நேரம் அல்ல என்றாலும்
வீசிவிடாதே தரையில் என்னை
சிற்பியே நீ வார்த்தது சிலையல்ல சிசு
கருவறையில் வைத்து உயிர் வளர்க்கிறேன்
புதிய வார்ப்புகள் நாளை தங்கத் தொட்டிலில்...
Kavignar Valvai Suyen

2 commentaires:

  1. ''..பூவுக்குள் புதுமழை பூமிக்கும் தெரியலையே
    பூபாளமோ தேனாமிர்தமோ நீ வாசிக்கின்றாய்..''
    ஆகா ரசனை..! இனிமை..!
    ரசியுங்கள்...
    இனிய வாழ்த்து
    வேதா. இலங்காதிலகம்.

    RépondreSupprimer
    Réponses
    1. சகோதரி வேதா ரசனைதனை இனிமையாக்கி பூமிக்கும் தெரியாமல் புதுமழை மேகமானாய் சகோதரா என இனிமை வாழ்த்துரைத்தீர்கள் நன்றி..

      Supprimer

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...