பூப்போலே பூக்கும் ஆசை
எனக்குள் நீ..பூவுக்குள் புதைந்த மகரந்தம்
உனக்குள் நான்..
இது சரியோ தவறோ என
சாமியிடம் கேட்டேன்
தகவல் பரிமாற்றத்தில்
கவரேச் இல்லை
விரிவுரை எழுதிவிட்டேன்
முகவுரையை யார் எழுதுவது
நீயா.. நானா..
தயக்கம் தீரவில்லை
இன்பமாய் இருவரும்
வளைக் கரங்கள் பற்றி
இன்புற்ற போதில்
சொற் தொடர் சுரங்கத்தில்
இன்று சிதறிய சிந்தனை முத்துக்கள் இவை
அத்தனையும் கோர்த்துவிட்டோம்
இந்த மாலை நாளை வாசகர் கையில்
பதிப் பேற்றம் செய்தது நீயும் நானும்தான்
விற்பனையாகிறது புத்தகக் கடையில்...
Kavignar Valvai Suyen
முகவுரையை யார் எழுதுவது!.......
RépondreSupprimerநன்றாக ஆராய்ந்து முடிவு எடுங்கள்..
வெற்றியும் உமக்கே!
வேதா. இலங்காதிலகம்.
சகோதரி வேதா, ஆராய்வு கொன்ட முடிவை எட்டுங்கள் வெற்றி நிச்சயம் என கட்டியம் தந்தாய் மகிழ்ந்தேன்.. - முகவுரை எழுத எழுதுகோல் எடுத்தேன் என் உசிர் எதுவெனக் கேட்டது அது, இடதுபுறம் பார்த்தேன் - உமாவை கன்டதால் இருவரையும் எழுதச்சொன்னது எழுதுகிறோம் இன்றும் வாழ்வின் முகவுரை...
Supprimer