samedi 3 janvier 2015

பொதி சுமக்கும் பொம்மைகள் ..


பெற்றோரின் ஆசை மூட்டைகள் எங்கள் முதுகில்
பொதி சுமக்கும் பொம்மைகள் நாங்கள்
பிள்ளைகள் எமது விளையாட்டெல்லாம்
தொல்லை என்கிறார் 
பச்சோலைகளாய் கிழித்து தோரணங்களாக்கி
எம்மை தொங்கக் கட்டுகிறார்
பிள்ளைப் பருவம் தாண்டித்தானே
இவர்கள் பெற்றவரானார்
கற்றுணர்ந்தவர்தானே பெற்றோரே
உம்மை கல்லாதவரென்று
எப்படி எடுத்துரைப்போம்
ஆசை உமக்குன்டென்பதை அறிவோம்
அதற்கொரு கால நேர அட்டவணை தந்தால்
அதன்படி நடப்போம்
விடுமுறை நாளிலும் விளையாட்டில்லை
எம்முடன் கூடிப் பேசிட ஒரு சிநேகம் இல்லை
எமக்குள்ளும் இருப்பது இதயம்தானே
அது மழைக்காலத்து பட்டுப் பூச்சி என்பதை
ஏன் மறந்தீர் ...
எமது ஆசைகள் திறக்கப்படாத புத்தகமாய்
அங்காடித் தெருவில் அலைபாய்கிறது அக்கினிக்குள்..
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...