vendredi 2 janvier 2015

மீளாய்வு கண்ட நாட்குறிப்பு..


 நாட் குறிப்பை மீளாய்வு செய்தேன்
ஓகஸ்ட் 2,3,4 -1989
விழிகளின் துளிகள் சுட்டது நெஞ்சை
உடைந்த நெஞ்சப் படகில்
கடந்த நினவலைகள்
அடித்தளம் தரை தட்டியது
மூழ்கிய நெஞ்சுக்குள்
முழ்கா படகாய் நான்
மான்களாய் என் இனம்
வல்வை படுகொலையில்
மான்டதை அறியா நிலையில்
மீன்கள் துள்ளி விளையாடுகின்றன
இருண்ட விழிகளை விட்டு
விலகவில்லை உறவுகள்
கண்ணீரும் செந்நீருமாய்
வந்து போகின்றனர்
உதவிட கரங்களை நீட்டினேன்
காணவில்லை அங்கே அவர்களை
இந்திய அராயக இராணுவம்
கனரக வாகனங்களால்
ஊரை எரித்து கடந்து செல்கின்றன
எரிந்த என் ஊரை என் விழி நீரால்
அணைத்திட முனைந்தேன்
முடியவில்லை மயானமே எஞ்சியது...
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...