ஏஞ்சலே என்ன செய்யப்போகிறாய்
என்னை நீ
மொழி அறியேன் காதல் விழி அறியேன் உன் விழி வரைந்த மடலில்
நான் இலக்கியம் ஆனேன்...
இலக்கை தொடுவது இதயம் என அறிந்தும்
இதுவரை தொடாமல் விட்டுருந்தேன்
தரையில் நெருப்பின்றி தண்ணீரில் எழுத்தின்றி
லேஸ்சர்ரினால் என்னை செதுக்கிவிட்டாய்
ஏஞ்சல் நீயடி என்னுயிர் நீ என்பேனா
எழுதாத எஸ் எம் எஸ்சில்
என்னை நீ கிள்ளுகிறாய்
உன்னை நான் தொடுவதற்கும்
மயிலிடம்தான் இறகெடுத்தேன்
சரீரமோ சாகித்தியமோ
ஒன்றே ஒன்றானது இருவருக்கும்
உன் ஈர்ப்பு விழிகளுக்குள் ஈர் துளியாய் வீழ்ந்துவிட்டேன்
இமைகளால் தாழ் பூட்டி சிறையிட்டு சென்றுவிடு....
Kavignar Valvai Suyen
இமைகளால் தாழ் பூட்டு!
RépondreSupprimerநல்ல கற்பனை .
ரசித்தேன்
வேதா. இலங்காதிலகம்.
கற்பனையின் புதிய சொற் படைப்புக்களை கண்ணுற்று பாராட்டி ரசனைதரும் அன்புச் சகோதரி வேதாவிற்கு மனம்கனிவான நன்றி...
RépondreSupprimer