உயர்ந்த அணையென உனையே நிறுத்தி ஆழுமைக்கொரு
அரசனாய் ஆண்டியாய் ஆதிக்கவாதியாய் வலம் வரும் மனிதா
ஆகாசம் அழுதால் குடை ஒன்று போதுமா
கூவம் கரைந்தால் உன் நலம் கொள்ளுமா
கொட்டிய மழைக்கும் கோபமே உன்மேல்
மீனை பிடித்தாய் மீனாய் நீ வெள்ளத்தில்
பூசை செய்து பூமிக்கு மழை அழைக்கும் மந்திரவான்கள் எங்கே
சாமியிடம் சொல்லி அடை மழை நிறுத்திட அச்சாரம் கொடுக்கலையோ
கிழிஞ்ச வாழ்வை இழைத்து இழைத்து விரிச்ச
பாயும் எங்கே போச்சு
அனாதை பிணமென ஆங்காங்கே மிதக்குதே உறவற்ற கூடு
அண்ணன் இல்லா வீட்டுத் திண்ணைக்கு இப்போ
எத்தனை பேர்ரா தம்பி
அட ஆடிக் கறக்கிறேன் பாடிக்
கறக்கிறேன்பான்
அடி பணி நிலையில் குறுகி தூக்காதே கூசா
நம்பி
மதி ஒளி பெருக்கி விடியலை தேடு
விதி வளி என்றால் விலகியே நில்லு
மின்னல் பறித்து மின்சாரம் ஆக்கு
தன்னொளி வீசும் தன்னாட்சி தேடு
தமிழீழம் தான்டா தமிழா உன் நாடு
உணர மறுக்காதே உள்ளக் கொதிப்பு ஊருக்கே
இருக்கு
இத்தனை உயிரும் எதற்காய் கொடுத்தோம்
இன்னல் கடலிலே இன்னுமா இன்னுயிர்
துலைப்போம் ...
Kavignar Valvai Suyen
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...