மூல நாயகனே முக்கண் இறையே சிவ சிவா
மதங்களின் வடிவில் உன்னை காண்கிறேன்
வேருக்கும் நீர் இன்றி நிழல் தரு மரமும்
போருக்குள் வீழ்ந்து மாள
உரிமை மீரலுக்குள் உன் அடியார்கள்
மானுட பிண மலைகளாய் குவிந்தும்
நீ வாராதிருப்பதேனோ ?
மதங்கள் எனக்கும் பிடிக்கும்
மதம் என்னை பீடித்திடாதிருக்க
நின் தாழ் பணிகிறேன்
பூயைகளில் பூரித்தது போதும்
எமக்கான யாக வேள்விக்கு நீயே நெய் ஊத்து
அக்கினிக்குண்டத்தில் அகம்பாவம் அழியட்டும் !
Kavignar
Valvai Suyen
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...