dimanche 13 mars 2016

செல்பிக்குள்ளே யாரு இல்லே .....



சிரிக்கிறாங்க சினுங்கிறாங்க செல்பிக்குள்ளே சீன்டுறாங்க
முகநூல் காச்சல் முகத்துதியாலே வைக்ச்சினேசன் போடுறாங்க
அச்சடிச்ச புத்தகமாய் அவளும் அவனும் அருகிருந்தும்
அட்டைகூட திறக்காமல் ஆளை ஆள் வெறுக்கிறாங்க
தோசை மேலே நெய்யை போலே அந்தரங்க மோகத்திலே
முகநூல் பக்கம் புரட்டிப் புரட்டி புது முகங்க தேடுறாங்க
ஐ லவ் சொல்லிச் சொல்லி ஐ எழுத்து அழிஞ்சிடுச்சே
எல் ஓ வி ஈ, யு, தட்டித் தட்டி இலவம் கிளி பறக்குதிங்கே
உயிரோ உயிர் கொல்லியோ புரியாம துடிக்கிறாங்க
புரிஞ்சவங்க அறிஞ்சவங்க செஞ்சாரிலே விலகுறாங்க
கையுக்குள்ளே உலகம் இப்போ செல்பிக்குள்ளே யாரு இல்லே
சொந்த பந்தம் வெட்டுப்பட்டு அறுந்த பட்டங்கள் பறக்குதடா  
ஆதரவு கொள்ளும் கையிலும் செல்பிதானே சினுங்குதடா ...
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...