dimanche 18 mai 2014

வற்றாத நெஞ்சக் குருதி...


வற்றிய விழி மடல்களை உடைத் தோடுகின்றன
வற்றாத நெஞ்சக் குருதி...
அபயம் அபயம் என்ற அபலக் குரலோடு
முள்ளி வாய்க்கால் ரெத்தக் கடல் அலை வந்து
நெஞ்சை பிழிகின்றது... 
தாய் வயிற்றுச் சிசுக்களும்
கருவறைக்குள் வைத்து அறுக்கப்பட்ட
அந்த குருதி நாள்..!
நெஞ்சுக்குள் குடி இருந்து கனக்கின்றது நெஞ்சம்..
கட்டுக் கடங்குமா கானகத் திவலைகள்
ஐந்தாண்டு நினைவென தொட்டு நிற்கிறோம்
அந்த மே, பதினெட்டை இன்று .!
 
சொல்லி அழுகிறோம் விம்மி வெடிக்கிறோம்
அவலக் குரல்கள் அடக்கப் பட்டு
அந்திம இருளுக்குள் இன்றும்
புதைக்கப் படுகின்றன..
ஒரு திரி விளக்கேற்றி
இளந்தோரை நினைந்திட வளி இல்லை..!
எங்கள் குரல் வளைகளை, முள் வேலிக் கரங்கள்
நெரிக்கின்றன, மாய்கிறோம்..!
 
இன்னும் எத்தனை ஆண்டுகள்
சிறை இருந்து சிதைவோம் 
இன்னும் எத்தனை ஆண்டுகள்
இனப் படு கொலையாளரிடம்
இன்னுயிர் இழப்போம்..?
உலக நீதியே, இன்னுமா உன் தாமதம்
தளராமல் எழுகிறோம் உன் வாசல் வருகிறோம்
தட்டிய கதவு திறக்கப் படவில்லை இன்னும்..!
நாம் இழந்த உறவுகளின்
இன்னுயிரை மீட்டுத் தருவாயா..?
இல்லை, சுய உரிமை தன்னாட்சி எமதே என
முன் மொழிந்து, எம் சுதந்திரத்தைத் தருவாயா..?
காத்திருக்கிறோம் இலவு காத்த கிளியல்ல
தமிழன் ஈழம் வெல்லும் புலிகளே...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...