அன்றலர்ந்த தாமரையின்
ஆருயிர்த் தோழனே
- தினம்
நீராடும் தோழியின் கொடி
இடை நீ வருடுவதால் இதழ் மலர்ந்து முத்தம் தருகிறாள் உன் தோழி..!
கொண்டவனின் துணை அற்று, விழி நீர் வறண்டோடி
நின்று லர்ந்து வீழ்ந்துவிட்டேன் மணல் காட்டில் நான்..!
தண்ணீரே, நீ இல்லையேல் தாமரை உதிர்கிறாள்..
கண்ணீரே, உன்னை உதிர்த்தே நானும் காய்கிறேன்..
மடல் திறந்த இதழ்களை, விண்ணும் மண்ணுமே
காயம் செய்கின்றன..!
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...