விண் மேகம் தந்த மழைத்
துளிகளே ...
என்னைத் தொட்டு வீழ்ந்தஉமது எண்ணிக்கையில் ,
அவளின் செல்போன் இலக்கங்களை
பதி வெடுத்து வைத்திருந்தேன்..!
வெள்ளம் வந்து என்னை அடித்ததால்
தொலைத்துவிட்டேன் இலக்கங்களை..!
ஓடும் வெள்ளத்தில் முக்குளித்து
பொருள் தேடும் செடி கொடிகளே
அவளின் இலக்கங்களை,
கண்டெடுத்தால் தந்துவிடுங்கள்
குடைக் காவல் விட்டு
அவள் வெளியே வருவதற்குள்..
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...