புள்ளினமாய் புலம் பெயர்ந்து தேசம் கடந்தேன்
மனம் எனும் மேடையிலே எனை ஆளும் மெல்லினமே
கார் இருள் சூழும் முன்னே கான மயிலாய் ஆடுகிறாய்
நிலா உலா அழைத்து குலாவும் அழகாய்
மாறாக் காதல் மகுடம் சூட்டி
மறு ஜென்மச் சிந்தை கூட்டி
உனை ஆள அழைக்கிறாய்
தென்றல் வீசட்டும் தேதி சொல்லட்டும்
என் தோள் சாய மறு ஜென்ம மலராய்
நீயும் மலர்ந்திடு....
இந் நாள் நினைவலைகள் அந் நாளிலும் ஓயாது
ஓரக் கண்ணால் நீ பார்த்தால் போதும்
உன் ஞாபகம் உயிராகும்
காலப் பெருஞ் சூழலே காந்தர்வக் காதலை
உயிர் வாழ உயிர் கொடு....
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...