jeudi 4 mai 2017

இது நியம் தானா !!!

மனசுக்குள் அந்த மத்தாப்பு
எத்தனை யாலங்களில்
வர்ணங்கள் தூவி
என்னை வாட்டுகிறது
உயிர் இருந்தும்
உயிரில்லா மாளிகையில்
ஒற்றைக் கிளி ஊமையானேன்

சிற்றலை வரிசையின் கதிரொளி
எங்கிருந்தோ வருகிறது அவ்வப்போது
பொங்கும் பூம்புனலின் பூபாளம்
மெலிதாய் வந்து என் உணர்வுகளில்
ஒத்தடம் தந்துவிட்டு
ஒய்யாரமாய் போகிறது

சொந்தம் தந்த பந்தமே எங்கே நீ
என் நினைப்பு உனக்கில்லையோ
போனது போனது தானா
போன பாதை மறந்தாயோ    
மஞ்சள் பூசி மருதாணி போட்டு
பொட்டு வைத்த அழகை
கண் பட்டுவிடுமே எனக் கூறி
கரிச் சட்டிப் பொட் டொன்று
என் கன்னத்திலே நீ இடுவாய்
                                     
நீ தொட்ட இடம் தேடுதடா உன்னை 
கண் பட்ட இடம் வாட்டுதடா கனவை
முகவுரை அழித்துவிட்டு
முடிவுரை தந்தாயோ

ஊரார் சொல்லும் வார்த்தை
நெரிஞ்சியென தைக்கிதடா நெஞ்சை
அமங்கலி எங்கிறார் இது நியம்தானா.....
                                                                                                                 
பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...