ஆகாய
வீதியிலே ஆடுதடி தென் குருத்து
பெண்ணாக
மலர்ந்துவிட்ட
மரிக்
கொழுந்தே நீயும் ஆடு
தாய்
மாமன் சீரினிலே
தாவணிக்கும்
தாலாட்டு
ஆடாமல்
ஆடி விட்டு
பொன்னூஞ்சல்
விட்டுறங்கு
தொம்மாங்கில்
இல்லையடி
இந்
நாளில் உன் வாழ்வு
ஆராரோ
பாடலுக்குள் அன்று நீ உறங்கிவிட்டாய்
அம்மாவின்
துயரினிலும் மூழ்காது விலகிவிட்டாய்
குங்குமத்தின்
சங்கமத்தில் ஓரங்க ஞாயமடி
கூவாத
குயிலாக கூண்டுக்குள்ளே நீயுமடி
பெண்ணாகப்
பிறந்தவளே மண் பார்த்து நடவாமல்
தீயாக
எழுந்து தீயோரை மாய்த்துவிடு
உன்
அண்ணாவின் அணியிலே
அக்காளும்
பெண் புலிதான்
ஆசை
நெஞ்சக் குருத்தை எல்லாம்
அக்கினியில்
போட்டாளடி
மூக்குத்தி
மோகத்திலும்
மூக்கில்
இல்லை துவாரமடி
வேர்
அறுக்கும் பகை முடித்தே
வேங்கையென
வாழலையா...
பூவுக்குள்
புயலான
பெண்
புலியே அவள்தான்டி
ஆதி
காலச் சடங்கை எல்லாம்
காலக்
கடலில் வீசிவிடு
அந்தி
இனி வருமோடி
எந்
நாளும் உதயமடி
பொத்தி
வைச்ச மல்லிகையே
தென்றல்
தொட்டு நீயும் ஆடு
ஆகாய
வீதியிலே ஆடுதடி தென்குருத்து
பாவலர்
வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...