lundi 15 mai 2017

முள்ளி வாய்க்கால் நினைவெழுச்சியில் தமிழீழ தேசியக் கொடியை ஏற்றுவோம்...



முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவெழுச்சி நாள் நிகழ்வில் தமிழீழ தேசியக் கொடியை ஏற்றுவதற்கு பிரித்தானிய தமிழர் பேரவையின் நிர்வாகம் தொடர்ச்சியாக மறுப்புத் தெரிவித்து வருவது அதன் உறுப்பினர்களினதும், ஆதரவாளர்களினதும் கடும் கண்டனத்திற்கு ஆளாகியிருக்கின்றது. தமிழீழ தேசியக் கொடியாகிய பாயும் புலிக்கொடிக்குப் பிரித்தானியாவில் எந்தத் தடையும் இல்லாத பொழுதும், அதற்குத் தடை இருப்பது போன்ற போலியான பிம்பத்தை உருவாக்கிக் கடந்த ஆண்டுகளில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவெழுச்சி நாள் நிகழ்வில் அதனை ஏற்றுவதற்குப் பிரித்தானிய தமிழர் பேரவை மறுப்புத் தெரிவித்து வந்த நிலையில், சென்ற வருடம் இலண்டனில் பிரித்தானியப் பிரதமரின் வாசத்தலம் முன்பாகத் தமிழீழ தேசியக் கொடியை ஏற்றி அந்நிகழ்வை வெற்றிகரமாகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மேற்கொண்டிருந்தது. அதே இடத்தில் தமிழீழத் தேசியக் கொடியை ஏற்ற மறுத்துப் பிரித்தானிய தமிழர் பேரவை நடாத்திய போட்டி நிகழ்வு மண்கவ்விய நிலையில், இம்முறை இலண்டனின் ஒரு பக்கத்தில் உள்ள மூடப்பட்ட பூங்கா ஒன்றில் போட்டி முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவெழுச்சி நாள் நிகழ்வைப் பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாறு போட்டி நிகழ்வுகளை நடாத்துவதைத் தவிர்த்து இம்முறையாவது தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுடன் இணைந்து பிரித்தானியப் பிரதமரின் வாசஸ்தலம் முன்பாகத் தமிழீழத் தேசியக் கொடியை ஏற்றி முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவெழுச்சி நாள் நிகழ்வை நடாத்துமாறு தமிழ்த் தேசிய உணர்வாளர்களால் மாறி மாறிக் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட பொழுதும் அதனை பிரித்தானிய தமிழர் பேரவையின் நிர்வாகத்தினர் அடியோடு நிராகரித்துள்ளனர். இதனையடுத்துத் தமிழீழ தேசியக் கொடியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பிரித்தானிய தமிழர் பேரவையின் நிர்வாகத்திற்கு மனு ஒன்றைக் கையளிப்பதற்கான கையெழுத்து வேட்டையில் அதன் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் இறங்கியுள்ளனர். இவ்வாறான கையெழுத்து வேட்டையில் பிரித்தானிய தமிழர் பேரவையின் ஆதரவாளர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர். இதேநேரத்தில் கடந்த ஆண்டு போன்று இம்முறையும் வரும் 18.05.2017 வியாழக்கிழமை இலண்டனில் உள்ள பிரித்தானியப் பிரதமரின் வாசஸ்தலம் முன்பாகத் தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவெழுச்சி நாள் நிகழ்வை நடாத்துவதற்கான ஏற்பாடுகளில் முழுவீச்சுடன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஈடுபட்டுள்ளது. இது பற்றிய ஊடக விவாத நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்து தருமாறு கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்திருந்த பொழுதும், இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளாது ஐ.பி.சி நிர்வாகம் இழுத்தடித்து வருவதாகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிங்களப் படைகளின் இரத்தம் தமிழர்களின் உடலில் ஓடுவதாகக் கூறிக் கடந்த ஆண்டு ஐ.பி.சி தொலைக்காட்சி ஒளிபரப்பிய நிகழ்ச்சியை அடுத்து அதில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்த பிறிதொரு விவாத நிகழ்ச்சியில் பங்கேற்காது அதனைத் தடாலடியாகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு புறக்கணித்ததற்கான பழிவாங்கலாக இவ்வாறான இழுத்தடிப்பு நடவடிக்கைகளில் ஐ.பி.சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளதா? என்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் கேள்வியெழுப்பியுள்ளன.

(நாடு கடந்த தமிழீழ அரசின் அறிக்கை)

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...