மேலைத் தேசம் எண்ணி
உழைப்புத் தேடி
விமானம் ஏறிய
பறவைகள் நாங்கள்
எங்கள்
வாழ்வின் இன்பச் சிறகை
சிறையில்
வைத்துவிட்டே பறந்து வந்தோம்
பணம் ஒன்றே
உயிரென போற்றும் உறவே
இதயங்கள் செத்து
காலாவதி யாகிவிட்டன
எங்களின்
பிணங்களே நடக்கின்றன இங்கே
உங்களிடம்
வந்து சேர்ந்த பண நோட்டினை
நுகரப்ந்து
பாருங்கள்..
அதில்
எங்களின் பிண நெடில் வீசும்..
பாவலர் வல்வை
சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...