பாலுக்குப் பாலகன் பசியென்றழுதிட
மடிப் பாலூட்டி நின் தாய் முகம் மலர
இகபரம் காணும் உயிரே !
வேண்டா நிலையுறு கூடுதனை
நீ விட்டுச் செல்ல மனம் இன்றி
நீள் மூச்செறிந்து நீண்டு
கிடந்திடினும்
பசும் பால் பருக்கி கரும வினை அகற்றி
இறைவனை வேண்டியே நின்னுயிர் பிரித்து
பிணம்
எனச் சொல்வார் சுடு காடு சுமந்து
சுட்டெரித்துச்
செல்வார் உறவென வந்தோரே
பந்த பாசம் எல்லாம் நிந்தன் உயிர்
உள்ளவரை
எந்த நிலை வந்தாலும் கலங்காதே
காத வழி தூரம் கூடி வர
உறவும் இல்லை உன்னோடு !!
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...