இயற்கை எனும் இளைய கன்னி
மஞ்சளரைத்து கன்னம் பூசி
நெஞ்சம் கிள்ள
வானம் விட்டு வந்த மழை
தோரணம் கட்டி பன்னீர்
தெழிக்க
வாசலெங்கும் பந்தலிட்டு
வான வில்லாள் புருவம் தீட்ட
வரவேற்பு வாசலிலே
மலரெனும் மங்கையர் கூட்டம்
குங்குமமும் சந்தணமும் தந்து
வாழை இலை பரிமாறி
விண்ணவரும் வந்திங்கு
வாழ்த்துதிர்க்க
மாங்கல்யத் திருநாள் திரும்பி வந்து
தித்திப்பு முத்தம் தந்தது எமக்கு
நன்றி தந்தோம் நாம் உமக்கு ....
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...