அதிசயம் தானடி ஆரணங்கே..!
சேலைத் தாவணியில் என்னை
நெய்து..!
சோப்புப் போட்டுத் துவைக்கிறாய்...
துவைக்காதே தையலே நீண்ட
நேரம்
ஆயிரம் குமிழிகளில்
என் ஆவி துடிக்கிதடி
கலிங்கப் போர்க் களத்தில்
உன் பட்டு விரல்கள் மோதுவதை
சலவைக் கல்லு தாங்குமடி
உன் மெய்ப் பாது காவலன் நான்.,
தாங்குவேனா..?
கவலை விடு..!
முன்னரங்கப் போரிலே...
வெற்றி நிச்சயம் நமக்கே
நமக்குத்தான்
பொழுது சாயும் நேரம் ஆச்சு..!
விளக்கை ஏற்றி வென்றுடுவோம்
வா...
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...