samedi 7 mai 2016

காதல் இல்லாமல் சாதல் ஏது !!!

காதலே காதலால் உனை காதலித்தேன்
முகம் பார்த் தழுத கண்ணீர் உதிரும் முன்னே
அகம் அறிந்து தந்தாயே பால் அன்னையே
என் முதல் காதலி நீயே நீயே
மாற்றம் அறியேன் மாதாவே நின் திருவடி
சரணம் சரணம் சரணம் அம்மா

மனச்சிற கறியேன் மனம்போல் உழன்றேன்
குழந்தை எனை மருவி அணைத் தெடுத்து சிந்தை மோந்து
நீ ஊட்டிய அறிவுப் பாலே ஈரடிக் குறளானது தந்தையே
முந்தை நிலை எப்பொழுதும் உனைத் தொழுகின்றேன் 
நீதானே என் இரண்டாம் காதலன் என் தந்தையே

முத்துச்சரம் தனில் ஒற்றை சொத்தை என எண்ணி எறியாது
முத்துக்களுறவில் நேச இழை கோர்த்து என்னுயர்க் காலம்  
எனைச் சேர கைவளை காப்பாய் காப்புடைச் சுடராய்
நேசப் பாலூட்டி நேச உயர்வளித்த உடன்பிறப்புகளே
நும்மின் மேல் நான் கொண்ட முத்தார காதலே
என் மூன்றாம் காதல்

ஏடெழுதத் தெரியா என்னை எண்ணும் எழுத்தும் கண்ணென
கல்விக்கண் ஒளி திறந்து அறிவுசால் அவை காணவைத்த
ஆசானே நீவிர் தந்த அறிவுப் பாலே மறைமொழிகளென
நான் கொண்ட நான்காம் காதல்          

நலிந்திடும் போதிலும் நலம் குறை நிலை கண்டுடும் போதிலும்
அகம் குளிர்ந்திட குன்றேற்றும் நட்பே நட்பெனும் பிளை நானறியேன்
வெந்தணல் வேகிடும் போதிலும் நெஞ்சுரம் மேவிட ஈர் ஐ விரல்களால் 
ஆரத்தழுவியே நாலாவிதத் தீயினையும் அணைத்தழுத்தி உயிருக்கு யிராகும்
நட்பே நீ இன்றி நான் வேறல்ல நீ என் ஐந்தாம் காதலே

இல்லத்தின் இனியவளாய் உள்ளத்தின் உயரிய அருட்கடலாய்
காதலால் காதலை கன்னம் இட்டு காலம் எல்லாம் காதல் வாழ
மகவொடு மனை அரசு இருத்தி வாழ்நாள் மாலை அள்ளிச் சூடி
அனைத்தையும் அன்பு செய்து காதல் கொண்டாய் தூயவளே
இனி என்ன என்றென்றும் என் வாழ்வில்
காதல் இல்லாமல் சாதலேது ...

பாவலர் வல்வை சுயேன்
06.05.2016

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...