தூற்றுவார்
தூற்றவும் போற்றுவார் போற்றவும்
மண்ணில் வந்து தவழ்கிறது மழைத் துளி !
மனிதா
நீ என்ன தவம் செய்தாயோ
ஆழக்
கிணறு தோண்டவில்லை
ஆகாசம்
ஏறி வாங்கவில்லை
வளங்களெல்லாம் வாரித் தந்து
வடிந்து செல்கிறது மழை நீர் உன்
வாழ்வுக்கு !
வடிகால்
மறித்து வரப்புயர்த்தி நிந்தனை செய்தவனே
கொள்ளுமிடம்
கொள்ள சமுத்திரம் காத்திருக்க
மாடி
மனை கோடி செல்வம் அழிந்ததென்று
வன்
சொல் வீசும் முன் உன் மனசிடம் கேட்டுச் சொல் !
இயற்கை
தந்த கொடை பெற்று நீ என்ன செய்தாய் அதற்கு !
பாவலர்
வல்வை சுயேன்.
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...