jeudi 5 mai 2016

தமிழரின் இறைவன் மீண்டும் வந்துவிட்டான் !

தமிழீழ விடுதலை புலிகளின் அகவை 40, மலர்வுத் தேதி - 05.05.1976


தமிழரின் இறைவன் மீண்டும் வந்துவிட்டான் !
ஆச்சரியக் குறியீடு உலக அரசியல் அரங்கில் !
தமிழீழ விடியல் நிச்சயம் என்று
பிடித்தவர் மனதில் மத்தாப்பு
பிடிக்கா பித்தன் பிதற்றுகிறான்,
இத்தனை நாளாய் இவன் எங்கிருந்தான் என்று !

வியப்புற்ற இலங்கை அரசின் விழிப் புலன்களை
கரி நாட்கள் அடைத்துக் கொண்டன !           
அராயக அவைக்குள் கலவர யுத்தம்
சத்தம் இன்றி மெல்ல கேழ்விப் பொறி தெறிக்க
இறுதிப் போரில் இறந்தது பிரபாகரனா ? டம்மியா ?

தமிழர் தேசம் எங்கும் உடன் எழுந்தது எச்சரிக்கை ஒலி
பயங்கரவாத தடுப்புச் சட்ட அமுலில்  ஊரடங்கு நிலை !         
உணவுத் தடை ! மருந்துத் தடை !
உழவியல் கெடுதி கொடுமைகளால் உயிர் வதைகள் !
வான் வீதி எங்கும் இயந்திரக் கழுகுகளின் உயிர்ப்பு
முள்ளி வாய்க்காலில் கொள்ளி இட்ட கிளசர் குண்டுகளோடு   
மானுட உயிர் உடல் தின்டு பள்ளிப் பிள்ளைகளையும்
எரித்துப் பறக்கிறது அது !

பாது காப்பெனும் பாதுகாப்பில்லா வலையங்கள்
தம் பசிக்கு ஒலிபெருக்கிகளால்
உயிர்களே வா வா என்றழைக்கிறது !
ஏகாந்தத் தீவெனும் எம் தேசம்
கண்ணீர் கடலில் கரைவதோ
அவசர அவசரமாய் ஐநாவின் ஆணை அழைப்பு 
ஐநா மன்றில் செத்த அமைதிப் பேச்சின் உயிர் உயிர்ப்பென்று
நீண்ட யுத்தம் பாத்துவிட்டோம் நீதி கிடைக்குமா சொல் சொல்
கூயாக்கள் தூக்கும் யாம்பவான்களே யம்பம் வேண்டாம்
விடுதலை வேண்டு....     
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...