samedi 14 mai 2016

முனை மழுங்கா முள்ளிவாய்க்கால் !


நிலா உலா விண்ணிலே நின் பாதங்கள் பாலை வனத்திலே
உலாகூடி ஊர்கோலம் போக உன் மனம் என்ன ஊனமா ?
தினம் தினம் கூர்வாள் தீட்டுதடா வெள்ளரசின் கீழ் பௌத்தம்
தமிழா நிந்தன் தலை கொய்திடத்தானே
நீண்ட சேனை நிறுத்தி !
நாடு சேனை அழிந்ததென்று நாணி நலிந்து நீ கிடவாதே
புயங்கள் ஆறாய் நட்சத்திரக் கூறாய்
உலக அரங்கில் எழுந்துவிட்டோம்!                    

சாயம்போன வாழ்வுக்கு சாகாவரம் ஏதுக்கடா ?
சோரம் போன வாழ்வுக்கு நீ சொந்தம், அல்லடா !
திறந்த வெளிச் சிறை இருப்பில் விருந்தும் மருந்தும் வீணேடா
வான் வெளியின் வசந்தக் காற்றை வந்து கொய்தன
இயந்திரக் கழுகும்
தேன் சோலை வாழ்விருப்பில் கிளசர்குண்டில்
லெட்சோப லெட்சம் எம்மவர் உயிரும்      
மடிந்து மாண்டதை நீ மறந்தாயோ ?
கொல்லும் கூர்வாள் கொடுமுனையில் குறுகி கருகிடும்
அடிபணி நிலைதானே அல்லும் பகலும் !

எழுகை எமக்கு புதிதோடா எம் தலைவன் தந்த உதயம்தானே
எம்மினத்தின் விடிவேடா.....
வைரங்களாலே வரைந்த தமிழீழம்
வரைமுறை உயிராய் காத்திட்ட காப்பகம்
முள்ளிக் கடலின் குருதி புனலோடு, உறங்கிச் சாவதோ ?
ஊசிமுனை நிலம் வேண்டி போர்ரிட்ட பெரும் யுத்தம்
உலகம் பொய்யென்று ஊதிச் சாய்த்ததோ ?

ஏற்றம் என்றும் எவரெஸ்ற்றே இனியும் பணிவா
தலை குனிவே !
முனைகள் தீட்டி போர்வாள் கூட்டி  உலகமன்றை
அள்ளி முடிப்போம் !
அநீதிவான்களின் அக இருள் களைந்து
முகமூடிக் கொள்கையை கீறிக் கிளிப்போம்
உலகின் வேதம் இதுதான் என்றால்
உரிமைக் கொடிதனை உயர்த்தி உயர்த்தி
அடிபணி நிலையினை அறவே அழிப்போம் !

அகிம்சை காத்த உயிர்களை யார்தான் காத்தார் ?
அறிவுசால் களஞ்சிய யாழ் நூலகத்தை
ஏன்தான் எரித்தார் ?
நெஞ்சுரம் தனை நீ இழந்து அநீதிக்கு முடி சூடுவதோ?
கொன்ற நாகம் கொடிதெனக்கண்டும்
பசும் பால் வார்த்து பணிவிடை புரிவதோ?
சொல்லடா தம்பி சொல்லு சொல்லு
கொல்லும் வர்க்கம் இல்லை என்றால்
எம் தாய் மண்ணில்  அல்லும் பகலும் அனல் ஏதடா!

லெட்சம் உயிர்கள் எதற்கு கொடுத்தோம் ?
லெட்சிய வேழ்வியை என்று துறந்தோம் ?
உழுத்தர்கள் உயிர்க்கு பொறிமுறை ஏற்றி
வெல்வோம் வெல்வோம்
உரிமை உயர்த்தி கொடுமை கொழுத்தி தமிழீழ தேசம்
தரணியில் படைப்போம்...
புலியின் மைந்தா புவியின் செல்வா புறப்படு புறப்படு 
தங்கத் தமிழா தரணி ஆள் செல்வா நின் கடன் காத்திட நீயும் வாடா...

சரித்திர நாயகன் தமிழரின் தேசியத் தலைவன்
மேதகு பிரபாகரன்
உரம் இட்டு உரம் இட்டு உன்னிடம் தந்துவிட்டான்
உளுத்தர்களாலே இழந்த செல்வங்கள் உயிர்க்கும் நிலை
காண்போம் காண்போம்
உறவென வந்து நஞ்சினை விதைத்து வஞ்சனை புரிந்திட்ட
முதளைகள் முதுகில் ருத்திரதாண்டவம் ஆடிக் கொல்வோம்
இதுதாண்டா வாழ்வு ! இனி என்ன சாவு ?
தர்மம் காத்து சமநிலை பெறுவோம்

உலகை உனக்குள் அன்பு செய் உலக அரங்கில் உன் கொடி உயர்த்து
அடிமை நிலைதனை அறவே களை
நீதி கொன்ற கொடுங்கோலை கொன்றுவிடு
ஒரு மொழி விடிவை அன்று தேடினோம்
இன்று உலக மொழி எல்லாம் உன்னிடத்தில்
எடுத்துரை என் நாளும் எங்கெங்க வேண்டுமோ
அங்கெல்லாம் எடுத்துரை உன் தேச விடுதலை

அநீதி குரலை அள்ளி முடித்து நீதிக்குரலை நீயே உயர்த்து
கொடுமைக் கூண்டு அழியுமடா  சுதந்திர உரிமை மீழுமடா
கொடியவர் உயிரை மாய்த்திடத்தானே தூக்குக் கயிறு துடிக்குதடா
சுய நிர்ணயம் இல்லையேல் சுதந்திரத்தை தேடுவோம்
அறிவின் அரிவாள் அமிலம் அல்ல
அனல் மூச்சில் அறிவை தீட்டுவோம்
எழு எழு இதிலும் நீதியுண்டு இனியொரு காலம் பொய்க்காது
வானுயர் வண்ணம் தீட்டித் தீட்டி சுதந்திர வாழ்வை சுயமாய் தேடி
சிறகினை விரிப்போம் வாடா தம்பி வாடா
முனை மழுங்கா முள்ளி வாய்க்கால் உன் முகவுரை கூறுதடா..

பாவலர் வல்வை சுயேன் -  14.05.2016

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...