அதிசயம் ஆச்சரியம் நோக்கொடு நோக்கி வியந்தன விழிகள்
உச்சி நோக்கி நெகிழ்ந்தேன் யார் விதைத்த வண்ண வயல் அங்கே
விளைந்த வைரங்களன்றி வீணில்லை ஏதும்
விழி பருகி வியந்து இமை காத்திருக்க
கன்னம் இட்டு கதிர் அறுத்தார் யாரோ ?
வண்ண வயலெங்கும் வைரங்களை காணவில்லை
தேடி அலைந்தன தோகை இமை விரித்த விழிகள்
விடிவெள்ளி அழைத்து தேடாதே என்றுரைத்து
உருளும் உலகம் இது விடிந்துவிட்டது
பிளைப்புக்கு போ என்றது !
வெக்கித்து நிலம் பார்த்து நிசப்தம் கொண்டன விழிகள்
நெஞ்சக்கதவை தட்டி மெல்லத் திறந்து
எனக்குள் ஒருவன் சொன்னான்
இருள்மறைகாடு கொடிதினும் கொடிதல்ல
அங்கேதான் நட்சத்திர உலகம் காணலாம்
காத்திரு என்றான் !
Kavignar Valvai Suyen
உச்சி நோக்கி நெகிழ்ந்தேன் யார் விதைத்த வண்ண வயல் அங்கே
விளைந்த வைரங்களன்றி வீணில்லை ஏதும்
விழி பருகி வியந்து இமை காத்திருக்க
கன்னம் இட்டு கதிர் அறுத்தார் யாரோ ?
வண்ண வயலெங்கும் வைரங்களை காணவில்லை
தேடி அலைந்தன தோகை இமை விரித்த விழிகள்
விடிவெள்ளி அழைத்து தேடாதே என்றுரைத்து
உருளும் உலகம் இது விடிந்துவிட்டது
பிளைப்புக்கு போ என்றது !
வெக்கித்து நிலம் பார்த்து நிசப்தம் கொண்டன விழிகள்
நெஞ்சக்கதவை தட்டி மெல்லத் திறந்து
எனக்குள் ஒருவன் சொன்னான்
இருள்மறைகாடு கொடிதினும் கொடிதல்ல
அங்கேதான் நட்சத்திர உலகம் காணலாம்
காத்திரு என்றான் !
Kavignar Valvai Suyen
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...