நற் காலம் இதுவென நான்
பூட்டி நிறுத்தம் செய்து
அழைத்துச் செல்வதில்லை சாஸ்திரம்
மெய் வீழ்த்தி பொய் அமர்த்தி
புறையோடும் நோயில்
பூஞ்சணம் கொண்ட காலம் இது !
நற் திங்களின் எழுகை இறப்பில்
தென்றலுக்கும் மரணப்படுக்கை
மயானம் எங்கும் நாய்களின்
ஓலம்
அரியாசனத்தில் நல் ஆள்வார்கள்
இல்லை
செங்கோலில் சொறி நாய்களின்
படை
சாமரையின் கவரி முடிகள்
காவலனின் சுவாசத்தில்
கருத்தரித்து கண்ணீரில்
கரைகின்றன !
சுவாசம் இழந்த கூட்டுக்கு
வாசம் தெழிக்கும்
பன்னீர் புஸ்பங்களை கண்டு
செயல் இழந்து மௌனராகம்
வாசிக்கின்றாள் நீதி தேவதை
யாரை
யார்தான் வெல்வாரோ நான் அறியேன் பரம்பொருளே?
Kavignar Valvai Suyen
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...