dimanche 29 mai 2016

நீ என்றும் சுமங்கலியே !!!!!



சுவாசம் இழந்தபின் வாசம் செய்யுமோ இங்கு என் கூடு
ஒற்றைச் சுவாசம் ஒருபோதும் ரெட்டை கூட்டில் வாழ்வதில்லை
உயர் வாழ்வளித்தேன் உனக்கென நான் நினைந்திருந்தேன்
நினைவலை அறுத்து பந்தம் எரித்து பாதியில் போகுதே உயிரு !
கூடு விட்டுச் செல்லும் என் ஆவி
உன்னை கூட்டிச் சென்று குற்றுயிரில் குறுகிடாது
விதி முடிந்த தென வீழ்ந்துவிடாதே !
நதி எழுதும் சிற்றலை தொடரில் பூக்களை தூதுவிட்டு
பாக்களோடு பல்லவியாகு
சரணம் நிறைவுற்று பிறவிப் பெருங்கடலின்
பெரும் பேற்றுக் கரை ஏறி கனிவுறுவாய் நீ !

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...