தூய்மையும்
துயரமும் ஏழ்பிறப் பெனும் சிந்தையும்
இன்றே
ஈகமாய் ஈழத்தில் இறைத்திட்டோம்
யுத்தமும்
துயரமும் கானல் கடலில் கரைந்திட்ட போதிலும்
ஏற்றிய
தீபங்கள் ஒளி பெறவேண்டியே உள்ளத் திரியினில்
நெய்
விளக்கேற்றுனோம்
விதியும்
மதியும் வேறென்பார் அதனையும்
அனுபவ வேழ்வியில்
வரைமுறை காத்தே
வார்ப்புகள்
செய்தோம்
மகத்துவம்
அறிவோம் மண்பற்று துறவோம்
சுதந்திர
தாகத்தின் சுயம்பொடு எழுவோம்
வேதனை
போக்கியே சாதனை உறுவோம்
மாண்டவர்
மனங்களில் எம் முகம் பதிப்போம்
தீபங்கள்
ஏற்றியே உறவினை அழைப்போம்
உள்ளொளிச்
சுடரில் உயிரினை காப்போம்
அவர்க்கொரு
சுவாசுவாசமாய் அன்பினை பொழிவோம்
ஏழ் பிறப்
பெய்திலும் எம் கடன் மறவோம்
என்றும்
போற்றியே எம்பணி வெல்வோம்
மண்ணின்
விடுதலை மான்பொடு மீளவே
தமதுயிர்
ஈர்ந்தோரின் ஈகம் நினைந்தே
என்றும்
எமதினமானமாய் கார்த்திகை ஒளியினை
கனலொடு
ஏற்றுவோம்
மறக்கொடி
தமிழனின் புலிக் கொடியே
விண்ணில்
எழுந்திடும் எம் துணைக்கொடியே
வியந்திடும்
உலகே விழித்துணை கொள்வாய்
தரணியில்
எமக்கொரு தமிழீழம் மலரவே
ஈழத்
திருநாட்டில் ஈகங்கள் செய்தோம்
தமிழரின்
தாகம் தமிழீழத் தாகமே.....
பாவலர்
வல்வை சுயேன்.
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...