mercredi 4 mai 2016

நீரோடும் பொய்கையிலே !

நீரோடும் பொய்கையிலே எனை ஆளும் செம்மீனே
பூந்துகில் தோகை துடுப்பெடுத்து
செவ்வன அழகே
என்னை மூழ்கவைத்தாய்
என் மனச் சிறகின் படகேறி
உன்னெழில் ஓவியம் தீட்டிவிட்டேன் !

மறுமுறை என ஒரு பிறப்பிருந்தால்
உன் துணை இதயம் நானாவேன்
தரையிலே நானும் தண்ணீரில் நீயும்
எதற்கென
தண்ணீரில் எழுதேன் உடன்பாடு
உன் கரம்பற்றி உயிரே உனக்காவேன்
அன்றுணர்வாய் நீ என்னை
புனர்யென்ம காதலின் நியம் நினைந்து !
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...