ஊரையும் உறவையும் ஏய்த்து உலகெங்கும் மேய்ந்தோரே
யல்லிக் கட்டுக் காளையென நீவிர் மார் தட்டிய சத்தம்
கேக்கலையே உலகரங்கில் அறுந்திச்சோ
உங்களின் இறக்கை !
மே தகு தலைவனின் பிறந்த நாள் பகரொளியிலும்
மாவீரர் நாள் உணர்வெழுச்சி மிகு நினைவேந்தலிலும்
காணலையே உங்களின் உணர்வுப் பொதிகளை
ரெட்டை வால் குருவிகளே எங்கே பறந்தீர்கள் !
நினைக்கலையே நீங்கள் எட்டாண்டை எட்டும் வேளை
மாவீர ஒளி முகங்களின் ஆத்மாக்களை அரவணைத்து
அள்ளி முத்தம் கொடுப்போம் நாமென்று
புரட்சித் தீ அணையவில்லை
எழுச்சி மிகை மேவுதடா
பெற்றோரும் சோதரரும் அற்றோர் அல்லடா
ஏய்த்து வாழாதீர் ஏமாரும் காலம் இனி இல்லை
விழிப்புணர்வோடு விழி பகன்றோம்
அந்தோ தெரிகிறது தமிழீழ விடியல் !
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...