திருமணம் அழகு வனம்
எங்கிறான் ஒருவன்
உதிர்கிறது மனம்
என் செய்வேன் !
மாநிறம் அல்ல என் மேனி இடையழகும் முருங்க
மரம்
இள வேணிலில்
பூர்த்தேன் இலையுதிர் காலங்களே
இரு விழி
துடைத்துப் போகின்றன
பருவம்
பதினாறென்பார் மீண்டும் ஓர் பதினாறு
என்னை
கடந்துவிட்டது !!
இப்போது யாரும்
என்னை பெண் பார்க்க வருவதில்லை
சீதணத்தோடு
சிற்றன்னை வேண்டுமாம்
மூத்தவள்
காலமாகிவிட்டாள் காத்தருள்வாயா என ஓர் வரன்
எங்கள் வீட்டு
முற்றத்தில் நாட்டப்படுகிறது
அவனின் மறு-மணத்துக்கான
பந்தல் கால் !!!
பாவலர் வல்வை
சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...