மூடித்
திறந்த இமை இரண்டில்
எண்ணம்
எல்லாம் வண்ணமே
வாலிப வயசு
வாழ்வெனும் கொலுசில்
கூர்மம்
கொண்டு கொல்லும் போதில்
பந்தம் என்ன
பாசம் என்ன
சொன்னால்
பாவமே
பற்றறுத்து
பற்றும் தீயில்
கண்ணில்
வேடமே !
முக்தி
என்றும் சக்தி என்றும்
சுற்றம்
சூழ்ந்து எரியுதடா
ஆத்மாக்கள் அங்கும் இங்கும்
அலையும் துயரை போக்கடா
தூயவர் இங்கே யாரடா !
தூரிகை என்ன தாரகை என்ன
அவரவர் காணும் கோலங்களே
ஆனவரை அழுதாலும்
ஆண்டவனை அழைத்தாலும்
நிர்வாணமே
இறப்பும் பிறப்பும்
இதுதானே
நாம் காணும்
நியதி யெனும்
நிதர்சனங்களே !
பாவலர்
வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...