mardi 28 avril 2015

ஊருக்குள் ஓடிவந்தாள் கங்கை ...


நீரற்ற நிலத்தில் நட்டுவைத்தான் இறைவன் எங்களை
கல்லணைக்குள் கட்டுண்டாலும்
கருணை விழியுடையாள் ஊருக்குள் ஓடிவந்தாள்!
வந்தவள் கங்கையெனக்கண்டு சிந்தை குளிர்ந்தோம்
நிமிடத் துளிகளுக்குள் ஏமாற்றிவிட்டாள் அவளும்
தேரடித் திருவிழாவின் சிதறு தேங்காய் இளநீராய்
கூட்டத்தில் தெளிக்கப்பட்டது தண்ணீர்
அன்பு நிறைந்தோரும் வம்புச் சண்டையில்
குடங்கள் உறுண்டு குழிவிழுந்து
குந்தவைத்த பெண்ணாய் ஓரத்தில் கிடக்க
தெரு முனையில் ஓடிமறைந்தது தண்ணீர் லாறி...
Kavignar Valvai Suyen

2 commentaires:

  1. Réponses
    1. தனபாலன், கங்கையும் பெண்தானே அடக்குமுறைக்குள் அணையிட்டு அவரவர் தேவைக்கு (க-வி) சூறையாடுகின்றார்....

      Supprimer

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...