விடியா
இரவில் வீழ்ந்தாய் ஈழமே- உன்
அழ
கிழந்து அங்கம் சிவந்த தேனோசிந்தை குளிர்ந்திட
நீ சீவி முடிப்ப தெப்போ...
கந்தகம் சுமந்து தடைகளும் தகர்த்து
உயிர்த் தியாக வேழ்வியில்
உயிர் நிறை உற்று
மானச் சேலை கட்டிய
மாறாப் பெங்கே...
உதயம் இன்றி இருண்ட காடாணாய்
கற்களும் முற்களுமே உன் மேனியில்
நெரிஞ்சி வடுக்களால் முள்ளிக் குருதி
அலை அலையாய் ஓயவில்லை
தண்ணீருக்கே தாகம் இங்கே
தரையில் மீன்களாய் நாங்கள் இங்கே
என்று தணியுமோ தமிழரின் தாகம்
வந்து தழுவுமோ வேங்கையின் காலம்.
Kavignar Valvai Suyen
விரைவில் நல்வாழ்வு மலரட்டும்...
RépondreSupprimerநம் தேசம் பெறவேண்டும் நல் வாழ்வு அது நலம் கெட புழுதியில் வீழ்ந்தாலும் தம்நல வாழ்வில் தன்நிறைவு காணும் தரம்கெட்டோரே இன்று தலைவனாகிறான்...
Supprimer