samedi 11 avril 2015

முக்காடு மறைப்பதில்லை எதையும்..


உச்சி மலை குளிர் ஊதாக்களே எச்சரிக்கை! எச்சரிக்கை!
வீசப்படுகிறது ஆசை வலைகள் .....
சினிமா மோக விதைகளாய் முக நூலில்!
வெள்ளித் திரையும் காணா அறிமுகம் நீ
அள்ளக் குறையா அழகுவனம் நீ
விரைந்து வா தாரகையே
வெற்றித் திரை காத்திருக்கிறதென!
வெற்று நாக்குகள் பறிக்கும் ஆகாசத் தாமரைகளை 
அள்ளி அள்ளிச் சூட்டுகிறது உங்கள் மேல்
பூத்தவனம் உம்மிடத்தில்
வெளிநாட்டுக் கரஞ்சியும் வெண்பனி மினுப்பும்
பொன்னும் மணியுமாய் மின்னுவதாலே..
 
உறுமீன் நீதான் என தெரிந்த நாரைகளுக்கு
ஒற்றைக் கால் தவம் கடிதல்ல
ஓடும் மீனை ஓட விட்டு
கொத்தக் காத்திருக்கிறது உன்னை!
நட்சத்திரக் கனாவில் மிதந்து நட்டாற்றில் சிதைந்துவிடாதே
எச்சி இலை அம்மணமாய் சாலை ஓரத்தில் நாளை
உன் தேகம் விலையாகும் முன் விழித்துக்கொள் இப்போதே
முழுக்க நனைந்த பின் முக்காடு மறைப்பதில்லை எதையும்..
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...