காத்தோடு கரம் கோத்து கைவீசிப்
போகும் அழகே
கல்த்தறையில் உன் பாதம் துயருறக்கூடாதென்றேபஞ்சணை மெத்தை தந்த பசும்புற்கள்
சலங்கை நாதம் கேக்கிதடி
வளர் நிலாவே வாடும் உன் வதனம் வாடாதிருக்க
தரை நிழல் தூவிய முகில் கூட்டங்களையும்
உன்னோடு உலா கூட்டிப் போகிறாய்
உனக்காக நான் ஏதும் செய்ததில்லை இதுவரை
ஊதாப் பூவாய் உன் காலடியில் கிடக்கிறேன்
எங்கே போகிறாய் நீ
பக்த்தன் நானே உன்மேல் பித்தனடி...
Kavignar Valvai Suyen
ரசித்தேன்...
RépondreSupprimerநன்றி என்னுறவே தனபாலன்..
Supprimer