எட்டுக்கால் பூச்சி என்றோ வட்டம்
இடும் கழுகென்றோ
சுட்டிலக்கம் இல்லாதது, எய்ட்ச்! இச்சைக் குளத்தில் அச்சம் கொள்ளேல்
காப்புறுதி இல்லா கலவிச் சங்கமத்தில்
உள்ளிருந்தே உயிர் கொல்லும்
உலகின் பயங்கரவாதி எய்ட்ச்!
உலகயுத்தம் உயிர்களைத் தின்பதுபோல்
ஆறு வினாடிக்கொரு ஜீவனை
உலகில் எய்ட்ச் சாகடிக்கிறது!
உலகப் போர் என்றால் ஐநா நிறுத்தும்
அந்தரங்கக் கலவியில்
அறியாமலே கொல்லும் எய்ட்ச்சை
எந்தச் சபை நிறுத்தும்
டிசம்பர் ஒன்றில் உலகே விழித்து உள்ளம் நொந்தாலும்
காப்புறுதி இல்லா கலவியில் கரைந்தே போகுது உசிரு
யாரை யார் நோவதென்று யாருக்கும் தெரியவில்லை
சிற்றின்ப வேளையில் சிரு உறை இல்லையேல்
கோட்டைக் கவசம் இருந்தும் உசிருக்குச் சேதமே
விஞ்ஞானக் கூடம் தேடல் விரித்து எய்தும்
எய்ட்ச் எனும் இயமன் இறக்கவில்லை
அவன் மரணிக்கும் வரைதனும் அணியுங்கள்
அவசியம் காப்பக உறையை..
Kavignar Valvai Suyen

Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...