இன்ப இழை படகு வீட்டில்
அந்த நிலா வராத போதும் ஒளிமயம் கண்டேனடி
வல்லினம் மெல்லினமாய்
உற்ற இடையினம் எனும்
மூன்றுடன் நீ வந்தவேளை!
சொல்லாட்சி தந்து நல்லாட்சி கொண்டவளே
வலம் சுற்றும் விழியிரண்டும்
மெல்லாசை கொண்டதென்ன
அன்புள்ள ஆணையில் அணை உடைத்து
துடுப்பில்லா ஓடம் ஆனேன்
எக்கரை இனி நான் ஏறுவேன் என்னவளே
எங்கே அழைத்துப் போகிறாய் என்னை நீ
கரை ஏறவேண்டும் கண்களை மூடிவிடாதே
உன் விழியே நான் காணும் கலங்கரை விளக்கு.....
Kavignar Valvai Suyen
கரை ஏறவேண்டும் கண்களை மூடிவிடாதே
RépondreSupprimerஉன் விழியே நான் காணும் கலங்கரை விளக்கு... kaathal...kaathal.....makilchy...
காதல் விழியின் கலங்கரை விளக்கில்லையேல் இவ்வுலகில் யாவும் மகிழ்ச்சியற்ற துயரே அன்புளம் தந்தீர்கள் சகோதரி வேதா நன்றி...
Supprimerஅருமை அண்ணா
RépondreSupprimerவாழ்த்துக்கள்
அருமையெனும் வாழ்த்துரைத்து அகமலர்ச்சியோடு வாழ்த்துகள் தந்தீர்கள் சகோதரி துஷ்யந்தி உங்கள் அன்புக்கு நன்றி...
Supprimerஅருமை அண்ணா
RépondreSupprimerவாழ்த்துக்கள்
அருமையெனும் வாழ்த்துரைத்து அகமலர்ச்சியோடு வாழ்த்துகள் தந்தீர்கள் சகோதரி துஷ்யந்தி உங்கள் அன்புக்கு நன்றி...
Supprimerஅருமை... அருமை... வாழ்த்துக்கள்...
RépondreSupprimerஅருமையென வாழ்த்துரைத்து அன்பு தந்தீரகள் தனபாலன் மகிழ்ச்சி..
Supprimer