என்னடா உலகம் இது – இதில்
இனிமை எங்கே இருக்கிறதுஇன்பம் இரு நாள் துன்பம் பல நாள்
இரு விழி நீரில் நனைகிறதே.. ..
அன்பெனும் உறவில் ஆயிரம் தொல்லைகள்
அனு தினம் நானும் பார்த்துவிட்டேன்..எனக் கொரு பிள்ளை பிறந்துவிட்டால்
என் நிலை எப்படி எடுத்துரைப்பேன்..
பெற்றவர் இல்லை தோள் தாங்க
நால்வர் வரலாம் என் பிணம் தாங்க
இதில் காதல் கொள்வதும் கண்மணி என்பதும்
காலம் விதைத்த பயிரடா
கண்ணீர் சிந்தும் மனிதராலே
கடலே உப்பாய் ஆச்சுதடா
கால தேவனே கருணை இருக்கா
விழி நீர் வற்றிப் போச்சுதடா
என்னடா உலகம் இது – இதில்
இனிமை எங்கே இருக்கிறது.. ..
Kavignar Valvai Suyen
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...