தென்றலுக்கும்
திங்களுக்கும் எங்களுக்கும்
தூரம் இல்லைத் தூரம் இல்லை அஞ்சோம் அஞ்சோம்
யார் கண்ணுக்கும் தெரியோம்
இருண்ட வாழ்வில் இனியும் சிதையோம்..
அடுப்படி வாழ்வும் அகப்பையின் நேசமும்
பெண்ணுக்கே உரிதென்று உச்சிவரி வகுத்தவரே
நஞ்சு மாலை எங்கள் நகையாகும்
நய வஞ்சக நரிகள் எங்கள் பகையாகும்
கடலடி ஆளத்தை கையளவே கொண்டோம்
கடலைத் தோண்டியே கப்பலையும் புதைப்போம்
இது தமிழீழ வானம் தமிழர் கடல் யாகம்
ஏறி வந்த சாகரவர்த்தனவே
எமை எரித்து நீ நிதம் சிரித்தாயோ
எனதுயிர் ஆயுதமே உனதுயிர் காலனடா
இனி உன் தாழ்வு எம் கடலடி ஆளமடா
முழக்கமும் மின்னலும் கூட
நாணம் கொண்டது தமிழீழத் தங்கையிடம்
இடியோடு வெடியாகி பிரகாரமானாள்
கடற்கரும்புலி லெப்டினன் கேணல் நளாயினி...
Kavignar Valvai Suyen

Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...