lundi 2 juin 2014

அஞ்சல் மூலையில் அன்னையின் முத்திரை..

அஞ்சல் மூலையில் அன்னையின் முத்திரை...!
குறுக்கெழுத்துக்களாக அங்கும் இங்குமாய்
அவளது ரெத்த எழுத்துக்கள்...!
நான் பெத்த ராசா..
வசந்தகாலப் பறவைதான் நீ
இலையுதிர்கால வேம்பு நான்
இன்றோ நாளையோ எனக்கு
தேதி குறிக்கப் பட்டுவிட்டது
நீ அள்ளி இட்ட தீ போதும்
எனக்கு கொள்ளி இடத்தானே
தேடுகிறேன் உன்னை நான்..
அன்னை முகம் ஐயன் முகம்
மறந்தறியாதே...
அஞ்சல் நான் அலைகிறேன்
மடி சுமந்தவள் அடி சாயும் முன்னே
முகவரியில் உன் முகம் பதித்துவிடு
இப்படிக்கு உன் அன்னை , சி.சிவகாமி

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...