ஆலமரத் தோப்பிலே ஆனந்த விழுது கண்டேன்
கிளை கொண்ட விரலினிலே குயில் பாட்டு
நான் கேட்டேன் ...
குக்குக் கூ எனும் கீதம், எதிர் பாட்டு
பாடி நின்றான் என்னருகே ஒரு சிறுவன் ..
குயிலின் கீதமும் இவனின் குக்குக் கூவும்
ஓய்ந்துவிட
தோடியா முகாரியா பைரவியா பூபாளமா
மொழி அறியா பாட்டில் குயில் என்ன கூறியது .?
இனி ஒரு ஜென்மம் எனக்கிருந்தால்
குயிலாகப் பிறந்து குயில் மொழி அறிந்து
பாடுவேன் நானும் குயில் பாட்டு..!
கிளை கொண்ட விரலினிலே குயில் பாட்டு
நான் கேட்டேன் ...
குக்குக் கூ எனும் கீதம், எதிர் பாட்டு
பாடி நின்றான் என்னருகே ஒரு சிறுவன் ..
குயிலின் கீதமும் இவனின் குக்குக் கூவும்
ஓய்ந்துவிட
விடை கிடைக்காத கேழ்வி ஒன்று
என் மனசுக்குள்ளே ஓயவில்லை ...தோடியா முகாரியா பைரவியா பூபாளமா
மொழி அறியா பாட்டில் குயில் என்ன கூறியது .?
இனி ஒரு ஜென்மம் எனக்கிருந்தால்
குயிலாகப் பிறந்து குயில் மொழி அறிந்து
பாடுவேன் நானும் குயில் பாட்டு..!
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...