jeudi 5 juin 2014

விடியணும் என்டால் விடியுமா தம்பி ...

விடியணும் என்டால் விடியுமா தம்பி
விடியலை தேடி ஒளியினை நாடு
விடிவு நிச்சயம் நிச்சயம் தம்பி
வீரம் விதைத்தெழு நீ
அண்ணன் வழியினை நம்பி நம்பி..         
 
நாட்டுக்குள்ளே நரிகள் இருப்பது நன்றோடா...
அது வீட்டில் எழுந்திடும்
விடுதலை விரும்பியை விடுமோடா
ஆட்டி படைக்கிறான் அன்றாடம் இங்கே
உன் அருகிருந்து ...
இவன் காட்டிக் கொடுப்பதால்
அந்திமந்தானே இன்னும் தினப் பொழுது       
 
நாடும் விடியணும்  நாமும் வாழணும்
எமக்கொரு ஈழம் போதுமடா ...
தரணியில் தமிழனாய் தமிழீழம் காண்போம்
கொடும் பகை எரியட்டும் நெறி முறை ஓங்கட்டும்
காலம் இதுதான் மாத்து மாத்தேன்டா ...
கருணை புரிந்தான் கரிகாலன் பிரபா
கள நிலை காண புறப்படடா ...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...