jeudi 29 mars 2018

மாலை வந்தனம் மலரிடம் நீ...


மாலை வந்தனம் மலரிடம் நீ சொல்லத்தானே – வெண்
நிலா வந்துனை சேர்ந்தது என் கண்ணாளா
இருள் மெல்ல வந்து இமைக் காவல் கொன்று 
விழி உற்ற நாணம் விலகிடத்தானே

நாலும் அறிந்து நான் உனை உடுத்தேன்
இதில் என்ன மாயமோ சிந்தையில் கோபமோ
கலங்கித் தெளிந்தேன் களவும் கற்றேன் கலங்கேனே
இருள் திரை சூழ அருள் மறை தந்தாய் அறிந்தேனே
பூத்துச் சொரிந்தேன் பூங்குழலானேன்
பருவப் பூ எனை பள்ளி அறை பார்த்தாய்
முன்னவர் முன்னே உன் எழில் எப்படி ஒளி நிற்பேன்

உயர் நிலை வீதியில் பகல் உலா விண் மதி
தனை உணர்ந்துதானே ஒளி முகம் தரவில்லை
எண்ணில்லா விழிகள் ஏதேதோ சொல்லும் இங்கே
கலாப மயிலாடி கண்ணசைவு தந்தும்
சரணாலையம் வரவில்லை சல்லாபம் கெள்ளவில்லை
மதி மயங்கா மதி அவளே மாறாப்பு சரியவில்லை  

கொஞ்சி கொஞ்சி கன்னம் சிவக்க சொல்லாததை உள்ளம் அள்ள
இன்பத் தூறல் நனைகின்றோம் குடைக்குள் மழை நீயா நானா
யாரடி கண்மணி ஊரிலே எவர்தான் கொஞ்சி மிஞ்சாதவர்
முத்து முத்தாய் முத்தச் சத்தம் நித்தம் சுவர்கள் நானைகிறதே     
தங்கமே தங்கமாய் உன் மூக்குத்தியாய் உயிர் வாழ்கிறேன்
கண் விழித்தவர் முன்னிலும் முத்தங்கள் தருகிறேன்
மௌனம் கலைக்காதே மற்றவர் அறியார் மாற்றங்கள் எமக்கில்லை
மாலை வந்தனம்
பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...